ஆலயத்தின் வரலாறு


ஆலயத்தின் வரலாறு


கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகா கட்டிமாங்கோடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மொட்டவிளை கிராமத்தில் அருள்மிகு சிவ சுடலைசுவாமி, பரிவாரமூர்த்திகளோடு பாரம்பரியமாக அருள் பாவித்து வருகிறார்.



சிவன் கோயில்


இத்திருக்கோவிலில் 01-01-1992 அன்று திருமுக கிருபானந்த வாரியர் அவர்களால் சிவன் ஆலயம் அமைத்து அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் 2002 - ஆம் ஆண்டு ஆலய பணி தொடங்கி 2004 -ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு பிரதிட்சை செய்யப்பட்டது.




மாதாந்திர வழிபாடு


திருக்கோவிலில் எல்லா சிறப்பு பூஜைகளும் (பிரதோஷ வழிபாடு, சங்கடகர சதுர்த்தி, இராகுகால துர்கா பூஜை, திருவிளக்கு பூஜை, சிவலிங்க பூஜை), எல்லா தமிழ் மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை "திருவாசகம் முற்றோதல்" மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.


சிறப்பு வழிபாடு


ஆண்டு தோறும் சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி (திருக்கல்யாணம்), பங்குனி உத்திரம், ஆடி பெருக்கு, சித்திரை விசு, போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆண்டு தோறும் மார்கழி இரண்டாம் வாரம் சிவ சுடலைசுவாமிக்கு திருவிழாவும் பஜனை பட்டாபிஷேக விழாவும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.



தினசரி நடை திறக்கப்படும் நேரம்


S No வேளை நேரம்
1 காலை 6:00 - 8:00
2 மாலை 5:00 - 8:00

Contact

+91 8903211538
+91 9442831255
+91 9344332244
yogaparameswarar@gmail.com,

Addres

Mottavilai,
Karankadu PO, KK Dist
Tamilnadu, India
Pin-629809

Copyright © 2016. Web Designing & Hosting by Galaxy Technology Park Pvt Ltd

Pacquiao Thurman Live Fight
Whyte Rivas Live Fight